இரத்தினபுரி மாவட்ட தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி கம்பனி, தனியார் தோட்டங்களின் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தனியார் தோட்டச் சொந்தக்காரர்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலத்துக்குக் காலம் தேயிலை உலர்ந்த இறப்பர் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் போது பணியாற்ற வரும் தொழிலாளர்களுக்குரிய கூலியை அதிகரித்து வழங்க முடியாத நிலைமையும் இதனால் இவர்களின் வருகை இன்னும் கேள்விக்குறியாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனினும் தனியார் தேயிலை, இறப்பர் தோட்டச் சொந்தக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தாலும் தமக்குரிய கூலியை சில தோட் ட உரிமையாளர்கள் வழங்குவதில் கஞ்சத்தனம் காட்டுவதாகவும் சம்பளத்தை வழங்காது சிலர் ஏமாற்றுவதால் பணிக்கு செல்வதைத் தவிர்த்துகொள்வதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இத்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் இத்தொழிற்துறையில் பயிற்சி பெற்றவர்களில் ஏற்படும் பற்றாக்குறையும் எதிர்காலத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்
Add new comment