1994 ருவாண்டா இனப்படுகொலை தொடர்பில் தலைமறைவாகியுள்ள நால்வரில் ஒருவரான புல்ஜன்ஸ் கயிஷோ தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“கூட்டு நடவடிக்கை ஒன்றின் மூலம் தென்னாபிரிக்காவின் பார்லில் வைத்து இனப் படுகொலையில் தலைமறைவாகி உலகில் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவரான புல்ஜன்ஸ் கயிஷோ நேற்று (26) கைது செய்யப்பட்டார்” என்று குற்றவியல் தீர்ப்பாயங்களுக்கான மீதமுள்ள சர்வதேச பொறிமுறை கடந்த புதனன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1994 இல் 100க்கும் அதிகமான நாட்கள் ஹுட்டு கடும்போக்காளர்களின் தாக்குதல்களில் டுட்சி இனத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 800,000 ருவாண்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் கயிஷோ முன்னாள் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் என்பதோடு அவர் மீது இனப் படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் 2001 முதல் தலைமறைவாக இருந்ததாக மேற்படி தீர்ப்பாயம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
Add new comment