அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் புளோரிடா ஆளுநர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியில் புளோரிடா ஆளுநர் ரோன் டிசான்ட்டிஸ் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயலும் டொனல்ட் டிரம்ப்புக்கு இது பெரும் சவாலாய் அமையும்.

ட்விட்டர் நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க்குடன் இணையத்தில் நேரடியாக உரையாடுவதற்கு முன், 44 வயது டிசான்ட்டிஸ் வேட்பாளருக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். தம்முடைய செயல்பாடுகளும் பாரம்பரியப் பண்புகளும் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று டிசான்ட்டிஸ் நம்புகிறார்.

கொவிட் நோய்ப்பரவல் காலத்தில் புளோரிடாவைத் திறமையாய் நிர்வகித்த அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் டிரம்புக்கும் டிசான்ட்டிஸுக்கும் சுமார் 40 வீத புள்ளிகள் வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. டிரம்ப் கிட்டத்தட்ட தினசரி சமூக ஊடகம் வழியே டிசான்ட்டிஸை சாடிவருகிறார்.


Add new comment

Or log in with...