கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை ஜூலை 15 ஆரம்பம்

ரயில்வே திட்டப் பணிப்பாளர் தகவல்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை மீண்டும் ஜூலை 15ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மஹவ - ஓமந்தை ரயில்வே திட்டப் பணிப்பாளர் அசோக்க முனசிங்க தெரிவித்தார்.

ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த ஜூன் மாதம் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் ரயில் சேவையை ஜூலை 15ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியுமெனவும், மஹவ - ஓமந்தை ரயில்வே திட்டப் பணிப்பாளர் அசோக முனசிங்க மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...