ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை டோக்கியோ நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமரால் சிநேகபூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது. இரு நாடுகளினதும் தலைவர்களது சுமூகமாக கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.


Add new comment

Or log in with...