பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பு
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அவர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்ட மேற்படி பிரேரணை மீதான வாக்களிப்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர். எனினும், வடிவேல் சுரேஷ் எம்.பி. ஆதரவாக வாக்களித்திருந்தார்.
அதற்கு காரணம் தெரிவித்துள்ள வடிவேல் சுரேஷ் எம்பி,
மடுல்சீமையில் மக்களைக் காக்க வைத்து கூட்டத்தில் கலந்து கொள்வதை புறக்கணித்து மக்களை ஏமாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக கட்சி எத்தகைய ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒழுங்காற்று நடவடிக்கை அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அவ்வாறான தவறை செய்த எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக ஏன் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment