ட்ரோன் மூலம் ஹெரோய்ன் கடத்தும் முயற்சி முறியடிப்பு

ட்ரோன் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி ஹெரோய்ன் போதைப்பொருளை இந்தியாவுக்குள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

இந்திய வான் எல்லைக்குள் ட்ரோன் ஆளில்லா விமானம் அத்துமீறிப் பிரவேசித்ததை அறிந்ததும் விரைந்து செயற்பட்ட எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த ட்ரோன் வயல் வெளியில் எதையோ போடுவதையும் அவதானித்துள்ளனர். அத்தோடு பஞ்சாப்பின் அமிர்தாஸ் பிரிவு படையினர் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விவசாய வயல் வெளியில் இருந்து துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்த கறுப்பு நிற ட்ரோனையும் இரு பொதிகளையும் எல்லைக்காவல் படையினர் மீட்டுள்ளனர். அந்த இரண்டு பொதிகளும் 2.6 கிலோ கிராம் நிறை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருளைக் கொண்டிருந்ததாக பஞ்சாப் எல்லைக் காவல் படையினர் விடுத்துள்ள ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...