மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் YLS ஹமீட் காலமானார்

- கட்சி தலைவர் ரிஷாட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் அனுதாபம் தெரிவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) அதிகாலை காலமானார்.

1962ஆம் ஆண்டு பிறந்த அவர், சுகவீனமுற்று களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவந்த நிலையிலையே இன்று அதிகாலை காலமானார்.

இவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் பிரத்தியேக செயலாளராக நீண்ட காலம் கடமையாற்றியிருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் இணைப்பு செயலாளராக கடமையாற்றிய அவர், முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக செயற்பட்டவர். 

ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய அவர், சட்டத் துறையில் மாத்திரமன்றி அரசியல் துறையிலும் ஒரு ஆய்வாளராக செயற்பட்டவர். 

அதன் பின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக செயற்பட்டு வந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர், முஸ்லிங்களின் சமூக, சமய. சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கும், நாட்டின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (25) இரவு 7.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அவரது மறைவு மிகவும் கவலையளிப்பதாக அ.இ.ம.கா. கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்துடன் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரபலங்கள் தமது கவலையை தெரிவித்துள்ளதோடு பல்வேறு அமைப்புகளும் தங்களது அனுதாபங்களை வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...