ஐந்து முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தியே பதவி நீக்கம்

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திய ஜனக ரத்நாயக்க என்ற நபரையே பதவி நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பிய பேராசிரியர் சரித்த ஹேரத் தற்போது அவருக்கு சார்பாக குரல் எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.

ஐந்து முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தியே பொது பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் ஒருவரை பதவி நீக்கும் நோக்கம் எமக்குக் கிடையாது.குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டு மின்சார கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய காரணத்துக்காகவே அவரை பதவி நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிராக கடந்த பெப்ரவரி

லோரன்ஸ் செல்வநாயகம் மாதம் 10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி பொதுமக்களுக்கான முக்கிய திட்டங்களுக்கு முரணாக செயற்படுகிறார்' என மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கும் போது கடந்த அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தி எம் பி கபீர் ஹசீம் இரண்டு தடவைகள் தமது எதிர்ப்பை வெளியிட்டார். எனினும் அந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சார சபையுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நபர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினராக தெரிவு செய்யப்படக்கூடாதென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனக ரத்நாயக்க மின்சார விநியோக கட்டமைப்புத் துறையில் தொடர்பு பட்டுள்ளார்.

அது தொடர்பான தகவல்களை அவர் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. அந்த வகையில் ஜனக ரத்நாயக்க அரசியலமைப்பு சபையை தவறாக வழி நடத்தியுள்ளார். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைக்கும் அதிகாரம் மின்சார சபைக்கு உண்டு.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்த போதும் அவர் மாத்திரம் தனிப்பட்ட காரணங்களுக்காக மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...