Tuesday, May 23, 2023 - 11:16am
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியும் பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (23) அதிகாலை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூருக்கான ஒரு நாள் விஜயத்தைத் தொடர்ந்து நாளை (24) ஜப்பான் செல்லும் அவர் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதுடன், எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை ஜப்பானிலிருந்து நாடு திரும்பவுள்ளார்.
Add new comment