வசந்த முதலிகேவின் இடத்திற்கு IUSF புதிய அழைப்பாளராக மதுஷான் சந்திரஜித்

- பல்கலை மாணவர் ஒன்றிய அமர்வில் தெரிவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) புதிய அழைப்பாளராக மதுஷான் (ச்)சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நேற்று (20) இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமர்வில் மதுஷான் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மதுஷான் சந்திரஜித், பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இதுவரை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக இருந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து பல முறை கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...