பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்க இலஞ்சம் பெற்ற 09 பேர் கைது

ஒன்றுக்கு ரூ.25,000 அறவீடு

கடவுச்சீட்டுகளை பெற்றுத் தருவதாக கூறி மக்களிடம் பணம் பெற்று மோசடியிலீடுபட்ட 09 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கருகில் நேற்றுக் காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். திணைக்களத்துக்கருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொடுக்க 25,000 ரூபா வரையில் பெற்றுக் கொண்டு வரிசையில் நிற்காமல் முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக,சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்குவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை விசாரணைக்குட்படுத்திய பொலிஸாரே

இந்த ஒன்பது பேரையும் கைது செய்தனர். தரகர்களுக்கெதிரான இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...