தனுஷ்க மீதான 4 குற்றச்சாட்டுகளில் 3 வாபஸ்

தனுஷ்க குணதிலக்க மற்றும் அவரது சட்டத்தரணி...

- வழக்கு ஜூன் 13 இற்கு ஒத்திவைப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கூறப்படும் வழக்கின் 4 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 02ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பாக, 32 வயதான தனுஷ்க குணதிலக்க கடந்த வருடம் சிட்னியின் CBD இல் உள்ள இலங்கை அணி தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நான்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுமதியின்றி 29 வயதான பெண்ணுடன் உடலுறவு கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கமைய இன்று (18) வியாழக்கிழமை இது தொடர்பான வழக்கு டவுனிங் சென்டர் நீதிமன்றில் தனுஷ்க குணதிலக்கவும், Tinder எனும் செயலி மூலம் தொடர்பு கொண்ட 29 வயதான குறித்த பெண்ணும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த பெண் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, அனுமதி இல்லாமல் உடலுறவு கொண்டமை தொடர்பான குறித்த வழக்கின் ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், மீதமுள்ள மூன்று குற்றச்சாட்டுகளும் வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதவான் அக்குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

பெண்ணின் பிறப்புறுப்பை ஊடுருவியமை மற்றும் அவரது ஆணுறுப்பை வாயில் திணித்தமை உள்ளிட்ட குணதிலக்கவின் மீதான வாபஸ் பெறப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுமாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீதமுள்ள குற்றச்சாட்டாக, பொலிஸ் அறிக்கையின்படி, குணதிலக்க பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட நிலையில், ஒரு கையால் பெண்ணின் கழுத்தை 20 முதல் 30 செக்கன்களுக்கு கழுத்தை இறுக்கியமை என கூறப்படுகிறது.

இதன்போது அவரை மேலும் இரண்டு முறை மூச்சுத் திணறடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வேளையில், புகார்தாரர் தனது உயிருக்கு பயந்து, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை என பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விடயங்கள் இடம்பெற்ற ​​கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு முன், குணதிலக்க தொடர்ச்சியாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை உடலுறவில் ஈடுபட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணுறை தரையில் இருந்ததை புகார்தாரர் அவதானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புகார்தாரர் அதிர்ச்சியில் இருந்ததால், பழிவாங்கப்படும் பயத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் எதையும் சொல்வதை அவர் பாதுகாப்பாக உணரவில்லை என பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆணுறை இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவதற்கு புகார்தாரர் தான் சம்மதிக்கவில்லை என்றும், புகார்தாரர் மூச்சுத் திணறலை உள்ளடக்கிய உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 13ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்க கடந்த வருடம் இலங்கையின் T20 உலகக் கிண்ண அணியுடன் அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ததோடு, அவர் அணியின் முதலாவது போட்டியில் விளையாடிய நிலையில் காயமடைந்து, பின்னர் எவ்வித போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவத்தில் அவர் நவம்பர் 06 ஆம் திகதி ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில் இலங்கை அணி நாடு திரும்புவதற்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

கடவுச்சீட்டை ஒப்படைத்து தினமும் பொலிஸில் முன்னிலையாதல் உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குணதிலக்க பிணையில் உள்ளார்.

அவரது பிணை நிபந்தனைகளில், அவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, டிண்டர் உட்பட எந்தவொரு டேட்டிங் செயலிகளையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும் குறித்த செயலிகளை டேட்டிங்கை மற்றும் அது சார்ந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

200,000 அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான ரொக்கப் பிணையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு இணங்கத் தவறினால் அப்பணம் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் இடைநீக்கி தடை விதித்துள்ளது.


Add new comment

Or log in with...