பியத் நிகேசல, சந்திக அபேரத்னவிற்கு பிணை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியத் நிகேசல மற்றும் கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொஸ்வத்த பிரதேசத்தில் குறித்த பிரதி மேயரால் தாக்கப்பட்டதாக சமூக ஆர்வலர் பியத் நிகேசல கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (10) அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தின் பின்னர் கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன முல்லேரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று (11) கொழும்பு பதில் நீதவான் அவரை அவதானித்த பின்னர் அவருக்கு பிணை வழங்கினார்.

அத்துடன், முன்னாள் பிரதி மேயர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தந்தையை பொலிஸார் நிகேசல தேசிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்தனர்.

அவரை மாளிகாகந்த நீதவான் நேற்று (11) பிற்பகல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.

பியத் நிகேசல சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகியிருந்தமை விசேட அம்சமாகும்.

பியத் நிகேசல காலி முகத்திடல் 'அரகலய' போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் எனும் வகையில் பிரபலமானார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதில் முனைப்பு காட்டியவராகவும் கருதப்படுகிறார்.

கடந்த வருடம் மே 09 ஆம் திகதி கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் பேர வாவியில் வீசப்பட்டமை தொடர்பான காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பியத் நிகேசல பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வதகல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...