- ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பதவியில்
பதில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையயில் இப்பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3ஆம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரது கடமைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 50ஆவது பிரிவிற்கமைய, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (03) இது தொர்பான பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி நாடு திரும்பும் வரை, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக செயற்படுவார்.
நிதி இராஜாங்க அமைச்சர்களாக ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment