பி.ப. 4.00 மணி வரை 3 மாவட்டங்களின் 5 பிரதேச செயலகங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

- நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை

இன்று (03) பிற்பகல் 4.00 மணி வரை 3 மாவட்டங்களில் உள்ள 5 பிரதேச செயலக பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் கேகாலை, பதுளை, மாத்தறை மாவட்டங்களில் உள்ள 5 பிரதேச பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, பசறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கட்டபொல, பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, இன்றையதினம் (03) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


Add new comment

Or log in with...