அலி சப்ரி - நிர்மலா சீதாராமன் சியோலில் சந்திப்பு

- மீண்டுமொருமுறை இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பு

வெளி விவவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் தென் கொரியாவின் சியோல் நகரில் இன்று (03) உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் 56 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுளள அமைச்சர் அலி சப்ரி இச்சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

 

 

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு துறைகள் தொடர்பான உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினமான மற்றும் சவாலான நேரத்தில் எமக்கு அளித்த அனைத்து உதவிகள் மற்றும் ஆதரவிற்காகவும், எமது மீட்பு செயல்முறைக்கு சாதகமாக பங்களித்ததற்காகவும் நிர்மலா சீதாராமனுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...