கொவிட் சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக நிபுணர் குழு பிழையான வழி நடத்தல்

- ஒப்புக் கொண்டார் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

கொவிட்-19 சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தவறாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்வதற்கான முடிவை எடுத்தபோது அரசாங்கம் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டதாகவும், ஆனால் இந்த அறிவுரை தவறானது என்பது தற்போது தெளிவாகிவிட்டது என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.

கொவிட் -19 மூலம் மரணமடைந்தவர்களை ஆரம்பத்தில் தகனம் செயவது தொடர்பில் மேற்கொண்ட தீர்மானத்தில் ஒரு சிலரின் இனவாத போக்கிற்கு அரசாங்கம் அடிபணிந்து சென்றதமை தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்றையதினம் (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன் காரணமாக பல நூறு கி.மீ. தொலைவில் உள்ள ஓட்டமாவடியில் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல மதத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஊப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

ஆயினும் இது ஒரு குறிப்பிட்ட சில பேராசிரியர்களின் தவறான முடிவு என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...