கோட்டாபய தன்னை மிரட்டியதாக, பொதுஜன பெரமுன எம்.பி., எஸ்.எம். சந்திரசேன தெரிவிப்பு

இரசாயன உரத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அமைச்சு பதவியிலிருந்து தன்னை நீக்கிவிடுவதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இரசாயன உரத்திற்கு  தடை விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் விவசாய துறைக்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்க காலத்தில் 2021 மே மாதம் இரசாயன உரப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டது. சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், படிப்படியாக நடைமுறைப்படுத்தாமல் நாடு முழுவதும் திடீரென விதிக்கப்பட்ட இத்தடை காரணமாக நாட்டின் விவசாயத்துறைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...