1st Test SLvIRE: இலங்கை அணி 3ஆவது நாளிலேயே இன்னிங்ஸ் 280 ஓட்டங்களால் வெற்றி

- இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றி இதுவாகும்

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 1ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெறறுள்ளது.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி பெறும் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் (16) ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 591 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

இதில் இலங்கை அணி சார்பில் 4 வீரர்கள் சதம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 179 (235) ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 (193) ஓட்டங்களை பெற்றதோடு, ஆட்டமிழக்காது சதீர சமரவிக்ரம 104 (114) ஓட்டங்களையும்,  தினேஷ் சந்திமால் 102 (155) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அந்த வகையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அயர்லாந்து அணி சார்பில் ஆகக் கூடுதலாக அவ்வணியின் விக்கட் காப்பாளர் லோர்கன் டக்கர் 45 (73) ஓட்டங்களையும் ஜேம்ஸ் மெக்கொல்லம் 35 (85) ஓட்டங்களையும், ஹரி டெக்டர் 34 (59) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து Follow On முறையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி இன்றையதினம் (18) சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அயர்லாந்து சார்பில் ஹரி டெக்டர் 42 (95) ஓட்டங்களையும், ஜோர்ஜ் டொக்ரல் 32 (54) ஓட்டங்களையும், கேர்டிஸ் கம்பர் 30 (73) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அந்த வகையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக பெற்ற 591 ஓட்டங்களை கடக்க முடியாத அயர்லாந்து அணி தோல்வியைத் தழுவிய நிலையில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்காளல் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிப்பதோடு, இத்தொடரின் 2ஆவது போட்டி எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Nishan Madushka  c †Tucker b Campher 29 48 67 4 0 60.41
Dimuth Karunaratne (c) c †Tucker b Adair 179 235 372 15 0 76.17
Kusal Mendis  lbw b Dockrell 140 193 251 18 1 72.53
Angelo Mathews  c †Tucker b White 0 3 11 0 0 0.00
Dinesh Chandimal  not out 102 155 242 12 0 65.80
Prabath Jayasuriya  lbw b Campher 16 23 25 3 0 69.56
Dhananjaya de Silva  lbw b McBrine 12 16 27 3 0 75.00
Sadeera Samarawickrama † not out 104 114 156 11 0 91.22
Extras (b 4, lb 3, nb 1, w 1) 9  
TOTAL 131 Ov (RR: 4.51, 584 Mins) 591/6d
 
Fall of wickets: 1-64 (Nishan Madushka, 14.5 ov), 2-345 (Kusal Mendis, 73.6 ov), 3-348 (Angelo Mathews, 76.2 ov), 4-373 (Dimuth Karunaratne, 84.1 ov), 5-390 (Prabath Jayasuriya, 89.6 ov), 6-408 (Dhananjaya de Silva, 95.1 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Mark Adair 24.3 3 95 1 3.87 1 0
Curtis Campher 21 2 84 2 4.00 0 0
Andy McBrine 40 2 162 1 4.05 0 0
Ben White 22 0 119 1 5.40 0 1
George Dockrell 21.3 0 112 1 5.20 0 0
Harry Tector 2 0 12 0 6.00 0 0
Ireland 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
James McCollum  b Jayasuriya 35 85 110 5 0 41.17
Murray Commins  b MVT Fernando 0 1 6 0 0 0.00
Andy Balbirnie (c) c KNM Fernando b MVT Fernando 4 4 4 1 0 100.00
Harry Tector  c de Silva b Jayasuriya 34 59 89 2 1 57.62
Curtis Campher  c RTM Mendis b Jayasuriya 0 2 2 0 0 0.00
Peter Moor  c †Samarawickrama b Jayasuriya 14 29 33 2 0 48.27
Lorcan Tucker † lbw b Jayasuriya 45 73 105 7 0 61.64
George Dockrell  lbw b Jayasuriya 2 24 33 0 0 8.33
Andy McBrine  lbw b RTM Mendis 7 35 55 1 0 20.00
Mark Adair  st †Samarawickrama b Jayasuriya 0 2 1 0 0 0.00
Ben White  not out 0 3 6 0 0 0.00
Extras (nb 2) 2  
TOTAL 52.3 Ov (RR: 2.72, 225 Mins) 143
 
Fall of wickets: 1-0 (Murray Commins, 1.1 ov), 2-4 (Andy Balbirnie, 1.5 ov), 3-74 (Harry Tector, 23.1 ov), 4-74 (Curtis Campher, 23.3 ov), 5-85 (James McCollum, 25.5 ov), 6-92 (Peter Moor, 31.4 ov), 7-108 (George Dockrell, 39.3 ov), 8-143 (Lorcan Tucker, 51.1 ov), 9-143 (Mark Adair, 51.3 ov), 10-143 (Andy McBrine, 52.3 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Asitha Fernando 5 2 9 0 1.80 0 0
Vishwa Fernando 9 2 38 2 4.22 0 0
Prabath Jayasuriya 23 10 52 7 2.26 0 0
Ramesh Mendis 14.3 3 40 1 2.75 0 2
Dhananjaya de Silva 1 0 4 0 4.00 0 0
Ireland 2nd Innings (Following on) 
BATTING   R B M 4s 6s SR
James McCollum  c de Silva b Jayasuriya 8 28 44 0 0 28.57
Murray Commins  c RTM Mendis b MVT Fernando 0 3 4 0 0 0.00
Andy Balbirnie (c) c de Silva b MVT Fernando 6 16 16 1 0 37.50
Harry Tector  run out (Karunaratne/†Samarawickrama) 42 95 145 4 0 44.21
Lorcan Tucker † lbw b Jayasuriya 6 10 12 1 0 60.00
Peter Moor  c KNM Fernando b RTM Mendis 0 5 9 0 0 0.00
Curtis Campher  c KNM Fernando b RTM Mendis 30 73 85 5 0 41.09
George Dockrell  lbw b RTM Mendis 32 54 64 6 0 59.25
Andy McBrine  c BKG Mendis b RTM Mendis 10 11 17 2 0 90.90
Mark Adair  not out 23 29 37 3 0 79.31
Ben White  lbw b Jayasuriya 1 2 4 0 0 50.00
Extras (b 5, lb 3, nb 1, w 1) 10  
TOTAL 54.1 Ov (RR: 3.10, 223 Mins) 168
 
Fall of wickets: 1-0 (Murray Commins, 1.3 ov), 2-8 (Andy Balbirnie, 5.1 ov), 3-24 (James McCollum, 10.1 ov), 4-32 (Lorcan Tucker, 12.6 ov), 5-40 (Peter Moor, 15.1 ov), 6-100 (Curtis Campher, 36.4 ov), 7-108 (Harry Tector, 39.5 ov), 8-131 (Andy McBrine, 44.3 ov), 9-167 (George Dockrell, 53.5 ov), 10-168 (Ben White, 54.1 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Prabath Jayasuriya 24.1 6 56 3 2.31 0 0
Vishwa Fernando 4 2 3 2 0.75 0 0
Ramesh Mendis 20 1 76 4 3.80 0 1
Asitha Fernando 3 0 15 0 5.00 1 0
Dhananjaya de Silva 3 0 10 0 3.33 0 0

 


Add new comment

Or log in with...