புலனாய்வு பிரிவு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்ட மாஅதிபர்

- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களில் சதி உள்ளதாக கருத்து

முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா நாளையதினம் (19) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தப்புல டி லிவேரா ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு தற்போதைய சட்ட மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் மாபெரும் சதி இருப்பதாக, தப்புல டி லிவேரா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், இடம்பெறும் விசாரணைகளுக்கமைய இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப் பகுதியில் சட்ட மாஅதிபராக இருந்தவர் எனும் வகையில், விசாரணை மட்டம் போதியதாக இல்விட்டால் பொலிஸாரை வரவழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தப்புல டி லிவேரா உத்தரவிட்டிருக்க வேண்டுமென, நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தப்புல டி லிவேரா எந்த அடிப்படையில் அவ்வாறான கருத்தை வெளியிட்ட மற்றும் எதற்காக அவ்வாறு கருத்து வெளியிட்டார் என்பதை அறியவே, தப்புல டி லிவேரா நாளை TID முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...