எல்லை நிர்ணய அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்துள்ளது.

வாக்குகள் மற்றும் வரைபடங்கள் ஆகிய தகவல்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கை, எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று (11) கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் எனும் வகையில் பிரதமரிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய, 8,000 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,000 ஆக கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில், கடந்த வருடம் நவம்பர் 01ஆம் திகதி எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பபான குழு பிரதமர் தினேஷ் குணவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த குழுவின் உறுப்பினர்களாக, ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே. தவலிங்கம், ஐ.ஏ. ஹமீட் ஆகிய உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.


Add new comment

Or log in with...