26 எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் இடைநிறுத்தம்

- 40 பெற். கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்கள் ஏற்கனவே இடைநிறுத்தம்

லங்கா ஐ.ஓ.சிக்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. QR ஒதுக்கீட்டை தொடர்ந்து அதனைக் கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத 40 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனுமதி பெற்ற எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது.

 

 


Add new comment

Or log in with...