கூடைப்பந்து பயிற்சி முகாம்

திருகோணமலை மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் புனித சூசையப்பர் கல்லூரி கூடைப்பந்து திடலில் பயிற்சி முகாம் மற்றும் கண்காட்சி போட்டி ஒன்றை நடத்தியதோடு கூடைப்பந்தாட்டத்தில் திறமை காட்டிய 18 பேருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

கடந்த வாரம் நடந்த கண்காட்சிப் போட்டியில் திருகோணமலை பொலிஸ் அணி 58–55 என்ற புள்ளிகளால் திருகோணமலை வளர்ந்தோர் அணியை வீழ்த்தியது. வாஜி குறூப் நிறுவனத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தம்பலகாமம் நிருபர்


Add new comment

Or log in with...