இந்தியாவில் கொவிட் அதிகரிப்பு

இந்தியாவில் இந்த ஆண்டில் ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை (30) 3,095 கொவிட்–19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 15,208 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எச்3என்2 வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் சூழலிலேயே அங்கு கடந்த சில நாட்களில் கொவிட் சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த புதனன்று புதிதாக 2,151 கொவிட் சம்பவங்கள் பதிவாகின.

கொவிட் நோய்த்தொற்று ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 44 மில்லியன் தொற்று சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. அமெரிக்காவை அடுத்து மிக அதிகமான கொவிட் சம்பவங்கள் இந்தியாவில் பதிவாயின.


Add new comment

Or log in with...