தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இந்திய அரசின் புலமைப்பரிசில்

- விண்ணப்பம் கோருகிறது இந்திய உயர் ஸ்தானிகராலயம்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு க.பொ.த உயர்தரம், இளங்கலைப் பாடநெறிகள் மற்றும் இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரத்தில் குறைந்தபட்சம் 6 C தர சித்தி அல்லது க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாமென, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த புலமைப்பரிசில்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

அதற்கமைய விண்ணப்பப்படிவங்களை www.hcicolombo.gov.in எனும் இணையத்தளத்திலிருந்து (கீழே தரப்பட்டுள்ளது) பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இலக்கம் 36-38, காலி வீதி, கொழும்பு-03 எனும் முகவரியிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும்  இலக்கம் 01A, மஹாமாய மாவத்தை, தபால் பெட்டி இல. 47, கண்டி எனும் முகவரியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தர பெறுபேறுகள், பெற்றோரின் சமீபத்திய சம்பளப் பட்டியல் ஆகியவற்றின் பிரதி மற்றும் பெற்றோரின் தொழில் தொடர்பான தோட்டக் கண்காணிப்பாளரின் சான்றிதழ் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2023 ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு முன்ளர் 'கௌரவச் செயலாளர், CEWET c/o இந்திய உயர் ஸ்தானிகராலயம், தபால் பெட்டி இலக்கம் 882, கொழும்பு-03' எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

PDF icon Ceylon-Estate-Workers-Education-Trust-CEWET-Scholarship.PDF (534.44 KB)

PDF File: 

There is 1 Comment

Add new comment

Or log in with...