ரி20 இல் ஷகீப் சாதனை

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு உதவிய அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் ரி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் செளதியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ரி20 சர்வதேச போட்டிகளில் ஷகீப் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்திருப்பதோடு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதியை (134) விடவும் இரண்டு விக்கெட்டுகளை அதிகமாக பெற்றுள்ளார்.

36 வயதான ஷகீப் அல் ஹசன் இதுவரை 114 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...