பாக். உலகக் கிண்ணத்தை பங்களாதேஷில் ஆட திட்டம்

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் ஆட்டங்களை பங்களாதேஷில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தியா போட்டியை நடத்துகின்றபோதும் இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் கூட்டத்தில் இது பற்றி பேச்சுவார்த்தை இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் நடத்துகின்றபோதும் இந்தியாவின் ஆட்டங்களை பொது இடத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

இந்த நிலையிலேயே டுபாயில் நடந்த ஐ.சி.சி கூட்டத்தில் உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தான் ஆட்டங்களை இந்தியாவுக்கு வெளியே நடத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் சூழலில் பங்களாதேஷில் போட்டிகளை நடத்துவதில் சிரமம் ஏற்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வாதிட்டுள்ளது. எனினும் ஐ.சி.சி கூட்டத்தில் இதுபற்றி உத்தியோகபூர்வமாக ஆலோசிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...