சூரியனில் இராட்சத துளை அவதானிப்பு

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பூமியை விடவும் 20 மடங்கு மிகப்பெரிய துளை ஒன்று சூரியனில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“கரோனல் துளை” என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல் மணிக்கு 1.8 மில்லியன் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருவதோடு அது நாளை பூமியை அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூரிய புயல் பூமியில் காந்தப்புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விஞ்ஞானிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...