அளவ்வ பிரதேச வைத்தியசாலையில் 'சுதேசி கொஹொம்ப பிரஜா சத்காரய'

மருத்துவ உபகரண நன்கொடை கையளிப்பு நிகழ்வில், சுதேசி நிறுவனத் தலைவி திருமதி அமரி விஜேவர்தன, வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கலாநிதி நிலந்த பிரேமரத்ன உள்ளிட்ட சுதேசி அதிகாரிகள் கலந்துகொண்ட போது...

அளவ்வ பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளதன் மூலம் சுதேசி கொஹொம்ப நிறுவனம், சுகாதாரத் துறையில் தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. இந்த நன்கொடையானது, இப்பகுதியில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எப்போதும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சுதேசி கொஹொம்ப உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில், 'சுதேசி கொஹொம்ப பிரஜா சத்காரய' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் நலன் திட்ட நன்கொடை மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால் முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புத் திட்ட தொடரின் மற்றுமொரு செயற்பாடு இதுவாகும்.

சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமரி விஜேவர்தன, இது தொடர்பில் தெரிவிக்கையில், "முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனும் வகையில், சிறந்த சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில் எமது சமூகங்களுக்கு உதவுவதை ஒரு சமூகப் பொறுப்பாக நாம் கருதுகிறோம்." என்றார்.

முழுமையாக 100% உள்ளுர் நிறுவனமான சுதேசி, எமது இலங்கை சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் என்பதோடு, பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை (CSR) தொடர்ச்சியாக முன்னெடுக்கும். சுதேசி கொஹோம்ப வர்த்தக நாமமானது, இயற்கை அன்னையை பராமரிப்பதிலும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் நிலைபேறான தன்மை திட்டங்களை செயற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விகாரைகளை ஒளியூட்டும் ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா’ நிகழ்வுகள்; 'சுதேசி கொஹொம்ப மிஹிதலா சத்காரய' வேம்பு மரநடுகை திட்டங்கள்; பாடசாலைகள், விகாரைகள் மற்றும் இலங்கையின வரட்சியான வலய பிரதேத்திலுள்ள சமூகத்தினருக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல்; கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுதேசி கொஹொம்ப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனமான சுதேசி, அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென நாம் விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவ அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கானவை."

சுதேசி கொஹொம்ப, ராணி சந்தன சவர்க்காரம் மற்றும் சுதேசி கொஹொம்ப பேபி உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள், இங்கிலாந்தின் சைவ உணவு சங்கத்தின் அங்கீகாரம் பெற்றவையாகும். இது நிறுவனத்தின் முன்னோக்கு சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகள் தொடர்பான ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கிறது. ஒரு உண்மையான இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 80 வருடங்களில் ‘தொழில்துறையில் முதன்முதல்’ எனும் தனது பெயரில் பெற்ற பல்வேறு உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

இலங்கையில் மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடி எனும் வகையிலும், சந்தையில் முன்னணியில் உள்ள Swadeshi Industrial Works PLC ஆனது, 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசி கொஹோம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப் ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ் மற்றும் ராணி ஷவர் கிறீம் ஆகியன சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் உள்ளடங்குகின்றன.

இலங்கையில் நம்பர் 01 மூலிகை வர்த்தகநாமமான 'கொஹொம்ப ஹேர்பல்' மற்றும் பாரம்பரிய அழகுசாதன வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை நிறுவனம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் சான்றளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனைத் திரவிய சங்கத்தால் (IFRA) சான்றளிக்கப்பட்டு ISO 9001 – 2015 தரநிலைகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.


Add new comment

Or log in with...