அரச நிறுவனங்களிடம் வருடாந்த அறிக்கைளை கோரும் பிரதமர்

விரைவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் பணிப்பு

அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை, விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெரும்பாலானஅமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள், தமது வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெரும்பாலான அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு வழங்கத் தவறிவிட்டதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்தே, பிரதமர் மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அரச நிறுவனங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு தாமதமின்றி பெற்றுக் கொடுக்க வேண்டியது, அந்தந்த நிறுவனத் தலைவர்களினும் அமைச்சின் செயலாளர்களினதும் பொறுப்பாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...