Tuesday, March 28, 2023 - 3:52pm
ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய “உயிர்நீத்த வீரர்களின் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் ஹிஜ்ரா விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
ஆரையம்பதி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிறன்று (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தை ஹிஜ்னா அணி வீழ்த்தியது. இதில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டன.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்
Add new comment