தாயை கொலை செய்த மகன் 8 வருடங்களின் பின் கைது

அநுராதபுரம், கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகனொருவரை 8 வருடங்களுக்கு பின்னர் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் 2015 ஆம் ஆண்டு தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் இறுதி யுத்தத்தின் போதான தாக்குதலில் உயிரிழந்தவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தாயைக் கொன்ற சந்தேகநபரின் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான இவர் கட்டுநாயக்க பகுதி இராணுவ முகாமில் கடமையாற்றுவதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...