தண்டவாளத்தில் பயணித்த மாணவன் புகையிரதத்தில் மோதி பலி

- தொலைபேசியில் பேசியவாறு சென்றிருக்கலாம் என சந்தேகம்

பதுளையில் இருந்து கண்டி நோக்கி சென்ற கடுகதி புகையிரத்தில் சிக்கி பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக, கண்டி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (26) கண்டி முல்கம்பொல புகையிரத மேம்பாலத்தின் அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மரணமடைந்த மாணவனின் பாடசலைப் புத்தகப்பை பரிசீலிக்கப்பட்டதில் கண்டி, மெதபோவல என்ற இடத்தில் வசிக்கும் 16 வயதடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவன் பாதசாரிகள் செல்லும் மேம்பாலத்தில் செல்லாமல் புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியவாறு, பயணித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த மாணவனின் சடலம், கண்டி தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோனைக்காக வைக்கப்ட்டுள்ளது.

கண்டி பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அக்குறணை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...