இலவச அரிசி வழங்கும் அரசின் திட்டம் இன்று முதல்

- 2 மாதங்களுக்கு தலா 10 கி.கி. வீதம் வழங்கப்படும்
- அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்கவுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக உச்சபட்சம் ரூ. 20 பில்லியனுக்கு போதுமான அளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறு, கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...