1st ODI; SLvNZ: நியூஸிலாந்து அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றி

- இலங்கை அணியின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு சிக்கல்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றி ஈட்டியுள்ளது.

நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரின் ஈடன் பார்க் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து அணி சார்பில், பின் அலன் 51 (49) ஓட்டங்களையும், ரச்சின் ரவிந்திர 49 (52) ஓட்டங்களையும், டெரில் மிச்சல் 47 (58) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித (2/38) மற்றும் லஹிரு குமார (2/46) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 275 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு, அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகக் கூடுதலாக 18 (25) ஓட்டங்களையும், சாமிக்க கருணாரட்ன 11 (24) ஓட்டங்களையும், லஹிரு குமார 10 (10) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி ஷிப்லெ 5 விக்கெட்டுகளை (5/31) கைப்பற்றினார். டெரில் மிச்சல் (2/12) மற்றும் ப்ளயர் ரிக்னர் 2/20 ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதற்கமைய, நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் இப்போட்டியை வெற்றி பெற்றது.

தனது முதலாவது 5 விக்கெட் பெறுதியை பதிவு செய்த மித வேக பந்துவீச்சாளர் ஹென்றி ஷிப்லெ போட்டியின் நாயகனாக தெரிவானார்.

இந்நிலையில் இந்தியாவில் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணி நேரடித் தகுதி பெறுவதற்கு நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் தீர்க்கமானதாக உள்ளது.

அடுத்த உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகளே பங்கேற்றிருக்கும் நிலையில் இதுவரை ஏழு அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன. இன்னும் நேரடித் தகுதி பெறுவதற்கு இலங்கையுடன் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் வேறு அணிகளின் முடிவுகளை எதிர்பார்க்காது இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற வேண்டுமானால் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3–0 என முழுமையாக வெல்வது கட்டாயமாகும்.

இந்த ஒருநாள் தொடரை இலங்கை 2–1 என வென்றால் மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைய வேண்டி ஏற்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்க அணி எதிர்வரும் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குறைந்தது ஒன்றில் தோற்க வேண்டும் என்பதோடு பங்களாதேஷுக்கு எதிரான அயர்லாந்து ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற வேண்டும்.

இந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் தோற்றால் இலங்கை அணி அண்டை நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

New Zealand  (50 ovs maximum)
BATTING   R B M 4s 6s SR
Chad Bowes  c Madushanka b Kumara 14 15 24 2 0 93.33
Finn Allen  c Rajitha b Karunaratne 51 49 88 5 2 104.08
Will Young  c Asalanka b Karunaratne 26 28 33 2 1 92.85
Daryl Mitchell  c Karunaratne b Kumara 47 58 81 3 2 81.03
Tom Latham (c)† c †Mendis b Shanaka 5 17 35 0 0 29.41
Glenn Phillips  c de Silva b Madushanka 39 42 59 3 2 92.85
Rachin Ravindra  c Shanaka b Rajitha 49 52 83 4 1 94.23
Henry Shipley  c Nissanka b Karunaratne 6 15 19 0 0 40.00
Matt Henry  c Shanaka b Karunaratne 0 2 1 0 0 0.00
Ish Sodhi  c †Mendis b Rajitha 10 18 25 0 0 55.55
Blair Tickner  not out 6 4 8 1 0 150.00
Extras (b 2, lb 4, nb 3, w 12) 21  
TOTAL 49.3 Ov (RR: 5.53, 233 Mins) 274
 
Fall of wickets: 1-36 (Chad Bowes, 5.2 ov), 2-71 (Will Young, 12.3 ov), 3-108 (Finn Allen, 18.5 ov), 4-147 (Tom Latham, 26.2 ov), 5-152 (Daryl Mitchell, 29.4 ov), 6-218 (Glenn Phillips, 39.2 ov), 7-240 (Henry Shipley, 44.1 ov), 8-240 (Matt Henry, 44.3 ov), 9-265 (Rachin Ravindra, 47.6 ov), 10-274 (Ish Sodhi, 49.3 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Kasun Rajitha 7.3 0 38 2 5.06 28 4 1 0 1
Dilshan Madushanka 8 0 58 1 7.25 20 6 1 3 1
Lahiru Kumara 10 0 46 2 4.60 32 3 1 1 0
Chamika Karunaratne 9 0 43 4 4.77 31 2 1 5 1
Wanindu Hasaranga de Silva 10 0 67 0 6.70 26 5 3 0 0
Dasun Shanaka 5 1 16 1 3.20 21 0 1 2 0
Sri Lanka  (T: 275 runs from 50 ovs)
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  b Shipley 9 10 15 2 0 90.00
Nuwanidu Fernando  run out (Tickner/Phillips/†Latham) 4 6 8 0 0 66.66
Kusal Mendis † c Tickner b Shipley 0 16 22 0 0 0.00
Angelo Mathews  lbw b Tickner 18 25 50 3 0 72.00
Charith Asalanka  c †Latham b Shipley 9 12 10 2 0 75.00
Dasun Shanaka (c) c Mitchell b Shipley 0 1 1 0 0 0.00
Chamika Karunaratne  c Phillips b Shipley 11 24 54 1 0 45.83
Wanindu Hasaranga de Silva  c Bowes b Mitchell 2 4 5 0 0 50.00
Kasun Rajitha  c Bowes b Mitchell 5 9 12 1 0 55.55
Lahiru Kumara  c Ravindra b Tickner 10 10 21 1 1 100.00
Dilshan Madushanka  not out 4 2 7 1 0 200.00
Extras (lb 1, w 3) 4  
TOTAL 19.5 Ov (RR: 3.83, 108 Mins) 76
 
Fall of wickets: 1-14 (Nuwanidu Fernando, 2.1 ov), 2-14 (Pathum Nissanka, 3.3 ov), 3-20 (Kusal Mendis, 7.1 ov), 4-31 (Charith Asalanka, 9.3 ov), 5-31 (Dasun Shanaka, 9.4 ov), 6-46 (Angelo Mathews, 13.2 ov), 7-49 (Wanindu Hasaranga de Silva, 14.1 ov), 8-57 (Kasun Rajitha, 16.3 ov), 9-62 (Chamika Karunaratne, 18.4 ov), 10-76 (Lahiru Kumara, 19.5 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Matt Henry 6 2 12 0 2.00 29 1 0 0 0
Henry Shipley 7 0 31 5 4.42 33 6 0 3 0
Daryl Mitchell 3 0 12 2 4.00 12 2 0 0 0
Blair Tickner 3.5 0 20 2 5.21 14 2 1 0 0

 


Add new comment

Or log in with...