லெஜன்ட்ஸ் தொடரில் ஜயசூரிய, டில்ஷான்

முன்னாள் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்போடு இந்தியாவில் நேற்று ஆரம்பமான கிலாடி இலெவன் லெஜன்ட்ஸ் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் சனத் ஜயசூரிய, டீ.எம் டில்ஷான் உட்பட இலங்கையின் முன்னாள் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபையால் நடத்தப்படும் இந்தத் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒன்பது நாட்கள் நீடிக்கும் போட்டிகள் காசிபாத்தின் ஜவாஹர்லால் நெஹ்ரு மைதானத்தில் நடைபெறுகின்ற.

இதில் பர்வீஸ் மஹ்ரூப், திசர பெரேரா, இசுர உதான, டில்ஷான் முனவீர, உபுல் தரங்க ஆகிய இலங்கை முன்னாள் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.


Add new comment

Or log in with...