2022 தரம் 5 புலமைப்பரிசில்; தரம் 6 பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்

- மேன்முறையீடு செய்ய விரைவில் ஒன்லைன் மூலம் வசதி

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, 2023 இல் பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தாங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ள பாடசாலைகளை இணையத்தில் https://g6application.moe.gov.lk/#/publicuser என்ற இணைப்பை அணுகுவதன் மூலம் சரிபார்க்கலாம்.

இந்த வெட்டுப்புள்ளிகளின்படி 2022 தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்கமைய தகுதிபெற்று பாடசாலை அனுமதி பெறாத அல்லது வேறு நியாயமான காரணங்களுக்காக பாடசாலையை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு முறையிடுவதற்கு எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம் வசதி வழங்கப்படவுள்ள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேன்முறையீடுகள் செய்வது தொடர்பான கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து மேன்முறையீடுகளும் குறிப்பிட்ட ஒன்லைன் முறையின் மூலம் மட்டும் எதிர்வரும் மே 01ஆம் திகதி வரை கல்வி அமைச்சிற்கு அனுப்பப்பட வேண்டுமெனவும், நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்படுகின்ற அல்லது அனுப்பி வைக்கப்படும் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மாணவர்களைத்‌ தேர்ந்தெருப்பதற்கும்‌ உதவிப்பணம்‌ வழங்குவதற்குமாக தரம்‌ 5 மாணவர்களுக்காக நடாத்தப்பரும்‌ 2022 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 2022 டிசம்பர் மாதம்‌ 18ஆம்‌ திகதி நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

குறித்த பரீட்சையின்‌ பெறுபேறுகள்‌ கடந்த ஜனவரி 25ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 334,805 மாணவர்களுள் 329,668 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமீத் ஜயசுந்தர அறிவித்திருந்தார்.

அதற்கமைய, இம்முறை ஆண்கள் பாடசாலைகளுக்கு தமிழ் மொழி மூலம் மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள்...

  • கொழும்பு ரோயல் கல்லூரி - 170
  • கொழும்பு டி.எஸ். கல்லூரி - 161
  • கொழும்பு இசிபதான கல்லூரி - 158
  • ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 155
  • ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரி - 151
  • யாழ். இந்துக் கல்லூரி - 148
  • மட். புனித மைக்கல் கல்லூரி - 147
  • காத்தான்குடி மத்திய கல்லூரி - 146

PDF icon 2022-Grade 5 Scholarship School Cut-Off Marks-Tamil.pdf (83.45 KB)
PDF icon 2022-Grade-5-Scholarship-School-Cut-Off-Marks.pdf (425.47 KB)

PDF File: 

Add new comment

Or log in with...