2nd Test; SLvNZ: 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அபார வெற்றி

- தோல்வியை அடுத்து பதவி விலகுவதாக இலங்கை அணித் தலைவர் அறிவிப்பு

நியூஸிலாந்து சென்றுள்ள இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் நியூஸிலாந்து அணி இவ்வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்சிற்காக 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 580 எனும் பாரிய மொத்த ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது முதுல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

அவ்வணி சார்பில் கேன் வில்லியம்ஸன் 215 ஓட்டங்களையும், ஹென்றி நிகொல்ஸ் 200 ஓட்டங்களையும், டெவொன் கொன்வே 78 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதற்கமைய, பதிலுக்கு தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 89 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

மேட் ஹென்றி மற்றும் மைக்கேல் பிரேஸ்வல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதற்கமைய, பலோ-ஒன் (Follow On) முறையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக நியூஸிலாந்து அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்த வகையில் தோல்வியை தவிர்க்கும் வகையில் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 358 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 2 ஓட்டங்களால் டெஸ்ட் சதத்தை தவறவிட்டட நிலையில் 98 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்கயைும், திமுத் கருணாரத்ன 51 ஒட்டங்களையும், குசல் மெண்டிஸ் 50 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ரிம் சௌதி மற்றும் பிளயர் ரிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக ஹென்றி நிகொல்ஸ் தெரிவானார்.
தொடரின் நாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் ஏப்ரல் 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவிப்பு
எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் காலியில் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியுஸிலாந்து அணியுடன் இடம்பெற்று முடிவடைந்த 2ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இவ்வறிப்பை வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் தாம் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

New Zealand 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Tom Latham  c Jayasuriya b Rajitha 21 73 118 0 0 28.76
Devon Conway  c & b de Silva 78 108 165 13 0 72.22
Kane Williamson  c sub (RTM Mendis) b Jayasuriya 215 296 390 23 2 72.63
Henry Nicholls  not out 200 240 393 15 4 83.33
Daryl Mitchell  c & b Rajitha 17 12 23 1 1 141.66
Tom Blundell † not out 17 17 24 2 0 100.00
Extras (b 2, lb 17, nb 8, w 5) 32  
TOTAL 123 Ov (RR: 4.71, 558 Mins) 580/4d
 
Fall of wickets: 1-87 (Tom Latham, 25.1 ov), 2-118 (Devon Conway, 35.4 ov), 3-481 (Kane Williamson, 112.6 ov), 4-530 (Daryl Mitchell, 117.4 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 32 6 126 2 3.93 0 6
Asitha Fernando 26 6 110 0 4.23 2 1
Lahiru Kumara 25 1 164 0 6.56 3 0
Dhananjaya de Silva 19 3 75 1 3.94 0 1
Prabath Jayasuriya 21 1 86 1 4.09 0 0
Sri Lanka 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c †Blundell b Henry 6 32 37 0 0 18.75
Dimuth Karunaratne (c) c Latham b MG Bracewell 89 188 293 9 0 47.34
Kusal Mendis  c Conway b DAJ Bracewell 0 10 14 0 0 0.00
Prabath Jayasuriya  c Mitchell b Southee 4 17 29 1 0 23.52
Angelo Mathews  c †Blundell b Henry 1 10 14 0 0 10.00
Dinesh Chandimal  st †Blundell b MG Bracewell 37 92 130 4 0 40.21
Dhananjaya de Silva  c Southee b MG Bracewell 0 6 7 0 0 0.00
Nishan Madushka † c MG Bracewell b Henry 19 31 35 3 0 61.29
Kasun Rajitha  run out (Latham/MG Bracewell) 0 9 16 0 0 0.00
Lahiru Kumara  not out 1 4 9 0 0 25.00
Asitha Fernando  c Williamson b Tickner 0 3 6 0 0 0.00
Extras (b 4, lb 1, nb 1, w 1) 7  
TOTAL 66.5 Ov (RR: 2.45, 299 Mins) 164
 
Fall of wickets: 1-13 (Oshada Fernando, 9.1 ov), 2-18 (Kusal Mendis, 12.3 ov), 3-27 (Prabath Jayasuriya, 19.1 ov), 4-34 (Angelo Mathews, 22.1 ov), 5-114 (Dinesh Chandimal, 51.4 ov), 6-116 (Dhananjaya de Silva, 53.3 ov), 7-156 (Nishan Madushka, 62.5 ov), 8-163 (Kasun Rajitha, 65.2 ov), 9-163 (Dimuth Karunaratne, 65.4 ov), 10-164 (Asitha Fernando, 66.5 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 15 6 22 1 1.46 0 0
Matt Henry 20 6 44 3 2.20 1 0
Doug Bracewell 12 7 19 1 1.58 0 1
Michael Bracewell 12 1 50 3 4.16 0 0
Blair Tickner 6.5 1 21 1 3.07 0 0
Daryl Mitchell 1 0 3 0 3.00 0 0
Sri Lanka 2nd Innings (Following on) 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c sub (WA Young) b DAJ Bracewell 5 36 49 0 0 13.88
Dimuth Karunaratne (c) c Conway b Southee 51 83 133 4 0 61.44
Kusal Mendis  c Williamson b Henry 50 106 136 8 0 47.16
Angelo Mathews  c MG Bracewell b Tickner 2 44 64 0 0 4.54
Dinesh Chandimal  c DAJ Bracewell b Tickner 62 92 141 8 0 67.39
Dhananjaya de Silva  c Nicholls b MG Bracewell 98 185 257 12 1 52.97
Nishan Madushka † c Southee b Tickner 39 93 124 4 1 41.93
Kasun Rajitha  c Williamson b Southee 20 110 148 1 0 18.18
Prabath Jayasuriya  c Tickner b MG Bracewell 2 45 57 0 0 4.44
Lahiru Kumara  c MG Bracewell b Southee 7 45 61 1 0 15.55
Asitha Fernando  not out 0 15 22 0 0 0.00
Extras (lb 6, nb 2, w 14) 22  
TOTAL 142 Ov (RR: 2.52, 600 Mins) 358
 
Fall of wickets: 1-26 (Oshada Fernando, 12.4 ov), 2-97 (Dimuth Karunaratne, 31.1 ov), 3-113 (Kusal Mendis, 43.6 ov), 4-116 (Angelo Mathews, 46.1 ov), 5-242 (Dinesh Chandimal, 76.2 ov), 6-318 (Nishan Madushka, 105.4 ov), 7-318 (Dhananjaya de Silva, 106.3 ov), 8-338 (Prabath Jayasuriya, 122.3 ov), 9-354 (Lahiru Kumara, 137.1 ov), 10-358 (Kasun Rajitha, 141.6 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 27 13 51 3 1.88 1 0
Matt Henry 29 8 59 1 2.03 1 0
Michael Bracewell 42 14 100 2 2.38 1 0
Doug Bracewell 18 3 58 1 3.22 4 2
Blair Tickner 26 6 84 3 3.23 6 0

 


Add new comment

Or log in with...