ரஷ்ய ஜெட் இடித்த அமெரிக்க விமானத்தின் வீடியோ வெளியீடு

ரஷ்யப் போர் விமானம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இடித்துத் தள்ளிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவப் படையின் ஐரோப்பிய கட்டளையகம் அதனை வெளியிட்டது.

வீடியோவின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் எஸ்.யு–27 விமானம் அமெரிக்காவின் எம்.கியு–9 ஆளில்லா விமானத்தை நோக்கிச் செல்கிறது. ஆளில்லா விமானத்தின் மேல் எரிபொருளைக் கொட்டுவது தெரிகிறது. அப்போது வீடியோ பதிவில் இடையூறு ஏற்பட்டது.

எரிபொருள் கொட்டப்பட்டபோதும் ஆளில்லா விமானம் வழக்கம்போல் இயங்கியது. இரண்டாவது முறை ஆளில்லா விமானத்தை நெருங்கும் போர் விமானம் அப்படியே அதை இடித்துத் தள்ளுகிறது.

சுமார் ஒரு நிமிடத்திற்கு வீடியோ பதிவாவதில் மீண்டும் இடையூறு ஏற்படுகிறது. ஆளில்லா விமானத்தின் சில பாகங்கள் இம்முறை சேதமுற்றிருப்பது தெரிகிறது.

சம்பவம் சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறியது.

கருங்கடலில் விழுந்த ஆளில்லா விமானத்தை கண்டுபிடிப்பது சுலபமல்ல. ஆனால் தவறானவர்களின் கைகளுக்கு அது கிடைத்துவிடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது.


Add new comment

Or log in with...