நாய்கள் மத்தியிலும் கொரோனா ஆபத்து!

- தடுப்பூசி தவிர்க்க முடியாதது

கடும் பாதிப்பு ஏற்படுத்திய டெல்டா திரிபுகள் உட்பட பல கொடிய கொரோனா திரிபுகள் நாய்களுக்கு மத்தியிலும் பரவலாம் என்றும், இதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் பல திரிபுகள் உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து உலகம் மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே கடும் பாதிப்பு ஏற்படுத்திய டெல்டா திரிபுகள் உட்பட பல கொடிய கொரோனா திரிபுகள் நாய்களுக்கு மத்தியிலும் பரவும் ஆபத்து உள்ளது. இதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் பல திரிபுகள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. இது குறித்து தென் கொரிய ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு நடத்தினர். அதில்தான் டெல்டா உள்ளிட்ட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திரிபுகள் நாய்களுக்கு இடையே பரவும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாய்கள் மத்தியில் இதுபோன்ற பாதிப்பு கண்டறிவது இதுவே முதல்முறையாகும். கொரோனா காரணமாக நாய்களின் நுரையீரலிலும் நுண்ணிய புண்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதன் மூலம் நாய்களும் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் அவை நேரடி தொடர்பு மூலம் மற்ற நாய்களுக்குப் பரவும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது இனி விலங்குகள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பால் புதிய திரிபுகள் பரவுமோ என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

"செல்லப் பிராணிகள் மூலம் மீண்டும் புதிய வகை தோன்றுவதைத் தடுக்க அதற்கும் நாம் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்" என்றனர் ஆய்வாளர்கள்.


Add new comment

Or log in with...