மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து

- 3 வருடத்திற்கு ஒருமுறை 25% சம்பள அதிகரிப்பு; வருடாந்த போனஸ் சலுகைகள் கிடையாது

3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட , மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்களை தொடரவோ அல்லது புதுப்பிக்கப்படவோமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்ததி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (10) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான செயன்முறைகளை ஆரம்பிக்குமாறு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...