வாராந்தம் செவ்வாய் நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு மீள்நிரப்பப்படும்

- இன்று முதல் அமுல்; காரணம் கூறுகிறார் அமைச்சர்

இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில், தேசிய எரிபொருள் அட்டை மூலமான எரிபொருள் QR ஒதுக்கீடு வாரந்தம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புதுப்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றையதினம் (08) அனைவரது எரிபொருள் கணக்கும் மீள்நிரப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் (CPC) மற்றும்  இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் (CPSTL) ஆகிய நிறுவனங்கள வார இறுதியில் செயற்பட வேண்டியிருப்பதாலும் அதற்கான செலவை குறைக்கும் வகையிலும் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் தற்போது வழங்கப்பபட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமுமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...