நலன்புரி நன்மை திட்டம்; தகுதியானவர்களை கண்டறியும் தரவுக் கணக்கெடுப்பு மார்ச் 31 நிறைவு

-  3,728,139 விண்ணப்பங்களில் 102,143  பேரே சரியான தகவல் வழங்கியுள்ளனர்
-  சரியான தகவல்களை  வழங்குமாறு  கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  அறிவுறுத்தல்களின் கீழ் முன்னெடுக்கப்படும் நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் , தரவுகளை ஆராய்வதற்கான தரவு  திரட்டல்   நடவடிக்கை  தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன் நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

உரிய திகதிக்கு முன்னர் தரவை வழங்க முடியாத விண்ணப்பதாரர்கள் நன்மைகளை இழக்க நேரிடும் என்றும்  நலன்புரி நன்மைகள் சபை வலியுறுத்துகிறது.

நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காக  தகுதியானவர்களை அடையாளங் காணும் திட்டத்தின், கீழ் தகவல்களை ஆய்வு செய்வதற்காக  தரவுகளை  சேகரிக்கும்   பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள   கள அதிகாரிகளுக்கு துல்லியமான தரவை துரிதமாக  வழங்குமாறு அனைத்து விண்ணப்பதாரிகளிடமும் நலன்புரி நன்மைககள் சபை  கோரியுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் விதிகளின் கீழ்  2022 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதியுடைய  அதிவிசேட   வர்த்தமானி எண் 2302/23 மூலம் வெளியிடப்பட்ட   2022 ஆம் ஆண்டின் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட  2022 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நலன்புரி நன்மைகளை வழங்குவதற்கான கட்டளைகள் திருத்தப்பட்டு  வெளியிடப்பட்ட   2022 டிசம்பர் 15 திகதியிட்ட 2310/30 எனும் அதிவிசேட வர்த்தமானிக்க  அமைய   இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நலன்புரி  நன்மகளுக்கு தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்களை கோரும்    செயல்முறை ஏற்கனவே நிறைவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3,728,139 ஆகும்.

இவற்றில், சரியான தரவுகளை  102,143  விண்ணப்பதாரிகள்  வழங்கியுள்ளனர்.

நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காக தகுதியானவர்களை அடையாளங் காணும் திட்டத்தில் தகவல்களை ஆராய்வதற்கான  தரவு சேகரிப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச  செயலகங்களையும்  உள்ளடக்கும் வகையில்  6728 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3190 அபிவிருத்தி அதிகாரிகள்   ,  494 பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள்  ,   205 கிராம உத்தியோகஸ்தர்கள் , 1127  வேறு அதிகாரிகள்  மற்றும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 1712 பேர் இதில் அடங்குவர்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதோடு  தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் பதிவு இலக்கம் அல்லது பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட  கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தோடு சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர்  மருத்துவ அறிக்கைகள், நீர் மற்றும் மின்சார கட்டணப் பட்டியல்களை  சமர்ப்பிக்க முடியும்.

"உண்மையை சொல்வோம்- சரியானவர்களுக்கு நன்மைகளை வழங்குவோம்" என்ற தொனிப்பொருளின்  கீழ் செயல்படுத்தப்படும்  தரவு சேகரிப்பு பணிகள் நிறைவடைந்ததும்   சரியான தரவுகளை வழங்கியதற்காக அறிவிப்பில்  விண்ணப்பதாரிகள்  கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும்   QR குறியீடு  வழங்கப்பட இருப்பதோடு    இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி தாம்  வழங்கிய தரவின் சுருக்கத்தை பார்வையிட முடியும். 


Add new comment

Or log in with...