பாடசாலைகள், அலுவலகங்களுக்கான ஸ்மார்ட்போர்டுகளை அறிமுகப்படுத்தியுள்ள சிங்கர்

அதிநவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு வலுவூட்டுவதில் புகழ்பெற்ற ஒரு நிறுவனமான சிங்கர் (ஸ்ரீலங்கா), மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், நிறுவனங்களுக்குள் அலுவலக பணிகளை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில் புத்தம் புதிய அனைத்து தொழில்நுட்பங்களும் அடங்கிய தட்டை முக (Flat Panel) ஸ்மார்ட்போர்டுகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன ஸ்மார்ட்போர்டை கணினி, புரொஜெக்டர் (projector) அல்லது இலத்திரனியல் வெண்பலகை (electronic whiteboard) ஆகப் பயன்படுத்தலாம் என்பதுடன், மேலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது.

ஸ்மார்ட்போர்டு கல்வி மற்றும் அலுவலக நோக்கங்களுக்காக பல்வேறு தெரிவுகளுடன் வருகிறது. விளக்கக்காட்சிகள், ஆவணங்கள், வீடியோக்கள், இசை மற்றும் பலவற்றைக் காண்பிக்கும் திறன் இதில் அடங்கியுள்ளது. அதன் உள்ளக மெமரியை (internal memory) ஆவணங்கள், பாடத் திட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான தேக்ககமாகப் (storage) பயன்படுத்தி, கற்பித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை மிகவும் திறம்படச் செய்யலாம். ஸ்மார்ட்போர்டுகளை இலகுவாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லுதல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வகுப்பறை மற்றும் அலுவலக முகாமைத்துவக் கூட்டங்களள் இடம்பெறும் அறை ஆகிய இரண்டிற்கும் சிறந்த சாதனமாக அமைகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போர்டுகள் குறித்து சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்தன அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் முன்னணி ஸ்மார்ட்போர்டு தொழில்நுட்பத்தை மீண்டும் இலங்கைக்கு வழங்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய டிஜிட்டல் யுகத்தில் இலங்கையின் கல்வித் தரம் மற்றும் நிறுவன வினைத்திறனை மேம்படுத்துவதற்கு நாம் எமது பங்களிப்பை வழங்குவது மிகவும் அவசியமாகும்,” என்று குறிப்பிட்டார். 

கடந்த பல ஆண்டுகளாக, சிங்கர் (ஸ்ரீலங்கா) பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பல நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு தட்டை முக ஸ்மார்போர்டுகளை (Flat Panel) வழங்கி வந்துள்ளது. பிராண்டிக்ஸ்  நிறுவனம் செயல்படுத்திய ‘‘Right to Read’ முயற்சியும் அத்தகைய ஒரு திட்டமாகும். இன்றுவரை, சிங்கர் இலங்கையில் 2,500 க்கும் அதிகமான ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வலுவூட்டியுள்ளது.

ஸ்மார்ட்போர்டுகள் 55”, 65”, 75” மற்றும் 85” அங்குலம் ஆகிய 4 வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன, மேலும் அவை Android மற்றும் Windows 10 இயங்குதளங்களில் கிடைக்கின்றன. தற்போது, நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு இடமளிக்கும் நோக்கத்துடன், சிங்கர் நிறுவனம், பாடசாலைகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது. சிங்கர் தயாரிப்புக்கான விரிவான 2 ஆண்டு கால உத்தரவாதத்தையும் வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காக, சிங்கர் நாடு முழுவதும் இலவச பொருத்தல் மற்றும் அர்ப்பணிப்புள்ள நிபுணர் அணியுடன் ஈடுஇணையற்ற விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போர்டு வரிசை பற்றிய மேலதிக தகவல்களை சிங்கர் வாடிக்கையாளர் சேவை இலக்கமான (011) 5 400 400 அல்லது www.singer.lk மூலம் பெறலாம்.


Add new comment

Or log in with...