உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேனவின் மனு உரிய செலவுகளுடன் தள்ளுபடி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனுவை எடுத்துக் கொண்டமைக்கான செலவாக ரூ. 21,000 கட்டணத்தை அறவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அவ்வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீட்டு மனு இன்று (01) அழைக்கப்பட்ட போதே நீதிபதிகளான சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Add new comment

Or log in with...