- பொருத்தமான இடத்தில் விசேட சிறுவர் வைத்தியசாலை
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க, யாழ்ப்பாணம், பதுளை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிர்மாணிக்க ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை, பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment