அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக மயந்த திசாநாயக்க

அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போதே, இந்த புதிய தலைவர் தெரிவு நடைபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டது.

எனினும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட ஆளும் கட்சியினரால் மயந்த திசாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...