கல்வி அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைவு; வசந்த முதலிகே மீண்டும் கைது

- பிக்கு மாணவர்கள் 48 பேர் உள்ளிட்ட 62 பேர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF)அழைப்பாளர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்ட, ஹோமாகமவில் உள்ள பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் குழுவொன்று இன்று (23) கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரியும், நேற்று நடைபெற்ற சத்தியாக்கிரகத்தை கலைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் கல்வி அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வசந்த முதலிகே உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 14 பேரும் பிக்கு மாணவர்கள் 48 பேரும் உள்ளடங்கலாக 62 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...