ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை வரவேற்க முடியாது

இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் MP

நாட்டில் தற்போது மிகப்பெரிய ஜனநாயகப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இது போன்ற ஜனநாயகத்தை கடுமையாக மீறும் செயல்கள் வேறு எந்நாட்டிலும் இடம்பெறவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இங்கு கருத்து தெரிவித்த அவர்,

நமக்கு வழிகாட்டிய லிபரல்வாத, ஜனநாயகவாத தலைவர்கள் இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாமென அமைச்சரவை தீர்மானம் எடுத்து, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கடிதங்களும் அனுப்பப்பட்டன. வேறு எந்தவொரு நாட்டிலும் இப்படி நடக்கவில்லை. பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினால், அவ்வாறானதொரு அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளவில்லை என பிரதமர் கூறுகிறார்.

இது, ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய தாக்குதலாகும். மக்களின் இறையாண்மைக்கு எதிராக அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்பது சர்வதிகார போக்காகும். மக்கள் அபிப்பிராயம் மற்றும் மக்கள் ஆணையை குறைத்து மதிப்பிட வேண்டாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...